தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர், முதுநிலை திட்ட உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 31 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Senior Project Associate
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Ph.D in Metallurgical and Materials Engineering அல்லது M.E/M.Tech in Metallurgical Engineering / Materials Engineering / Materials Science & Engineering / Laser Technology/ Laser Science & Applications/ Manufacturing Engineering / Thermal Engineering படித்திருக்க வேண்டும் மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 42,000
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Tech in Biotechnology / Biomedical Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,000 + HRA
Project Associate – I
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: M.Sc in Chemistry/ Physics/ அல்லது M.Sc in Chemistry/ Physics/ Material Science/ Nanoscience அல்லது B.Tech in Biotechnology/ Industrial Biotechnology/ Mechanical Engineering / Metallurgical Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000 - 31,000 + HRA
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: Diploma in Mechanical Engineering அல்லது B.Sc in Microbiology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
வயது தளர்வு: அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 07.05.2024 மற்றும் 08.05.2024 அன்று நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம்: Director, CSIR-CECRI, Karaikudi
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://www.cecri.res.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“