தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,500 – 81,100
Junior Secretariat Assistant (General)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
Junior Secretariat Assistant (Finance & Accounts)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
Junior Secretariat Assistant (Stores & Purchase)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
வயது தளர்வு: அரசு விதிகளின் படி எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு https://jsarecruit.cecri.res.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.