karaikudi CSIR recruitment 2022 for JSA and Steno posts: தமிழ் நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் 14 இளநிலை செயலக உதவியாளர், சுருக்கெழுத்தர் மற்றும் வரவேற்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் ஒரு முதன்மையான நிறுவனமான, சிஎஸ்ஐஆர் - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் -சிஇசிஆர்ஐ), காரைக்குடி, பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் இளநிலை செயலக உதவியாளர், சுருக்கெழுத்தர் மற்றும் வரவேற்பாளர் பல்வேறு பதவிகளை நிரப்ப சிறந்த கல்வியறிவு கொண்ட ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளநிலை செயலக உதவியாளர் (JUNIOR SECRETARIAT ASSISTANT)
காலியிடங்களின் எண்ணிக்கை – 09
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்
வயதுத் தகுதி : 14.02.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 28,415
இளநிலை சுருக்கெழுத்தர் (JUNIOR STENOGRAPHER)
காலியிடங்களின் எண்ணிக்கை – 04
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்
வயதுத் தகுதி : 14.02.2022 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 37,239
வரவேற்பாளர் (RECEPTIONIST)
காலியிடங்களின் எண்ணிக்கை – 01
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் வரவேற்பாளராக 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 14.02.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,802
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு (Written examination/ Skill Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://jsarecruit.cecri.res.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து print எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் 12.10.2021 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி,
The Controller of Administration, CSIR–Central Electrochemical Research Institute, Karaikudi – 630003, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2022
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500
ஆனால் SC/ST/PwBD/பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.