தமிழ் நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் 54 தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் ஒரு முதன்மையான நிறுவனமான, சிஎஸ்ஐஆர் - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் -சிஇசிஆர்ஐ), காரைக்குடி, பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் டெக்னீசியன் பல்வேறு பதவிகளை நிரப்ப சிறந்த கல்வியறிவு கொண்ட ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 41
வயதுத் தகுதி : 27.09.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 50,448
கல்வித் தகுதி:
வேதியியல் 10 பணியிடங்கள் : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் B.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
இயற்பியல் 2 பணியிடங்கள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் B.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
மைக்ரோபயாலஜி 1 பணியிடம்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மைக்ரோபயாலஜி (நுண்ணுயிரியல்) பிரிவில் B.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
பயோ-டெக்னாலஜி 1 பணியிடம்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயோ-டெக்னாலஜி (உயிர்-தொழில்நுட்பவியல்) பிரிவில் B.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
கணினி அறிவியல் 3 பணியிடங்கள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் (Computer Science / Information Technology) பிரிவில் B.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 1 பணியிடம்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் (Hotel Management) பிரிவில் B.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
கணிதவியல் 1 பணியிடம்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதவியல் (Mathematics) பிரிவில் B.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 2 பணியிடம்: டிப்ளமோ இ.சி.இ (Diploma in Electronics and Communication Engineering /Tech) படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
எலக்ட்ரிக்கல் 6 பணியிடங்கள்: டிப்ளமோ இ.இ.இ (Diploma in Electrical and Electronics Engineering /Tech) படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ரூமெண்டேசன் 1 பணியிடம்: டிப்ளமோ (Diploma in Electronics and Instrumentation Engineering /Tech) படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
மெக்கானிக்கல் 7 பணியிடங்கள்: டிப்ளமோ மெக்கானிக்கல் (Diploma in Mechanical Engineering /Tech) படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
ஏசி மெக்கானிக் 2 பணியிடங்கள்: டிப்ளமோ ஏசி மெக்கானிக் (Diploma in Refrigeration & AC Engineering /Tech) படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சிவில் 2 பணியிடங்கள்: டிப்ளமோ சிவில் (Diploma in Civil Engineering /Tech) படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
கணினி அறிவியல் 2 பணியிடங்கள்: டிப்ளமோ கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் (Diploma in Computer Science Engineering/ Information Tech) படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
டெக்னீசியன் (TECHNICIAN)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 13
வயதுத் தகுதி : 27.09.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 28,216
கல்வித் தகுதி: எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர் போன்ற ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு (Skill/Trade Test /Written examination) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cecri.res.in/jobs/Advt_02_2021_TA_Tech.html என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து print எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் 12.10.2021 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி,
The Controller of Administration, CSIR–Central Electrochemical Research Institute, Karaikudi–630003, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2021
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500
ஆனால் SC/ST/PwBD/பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://cecri.res.in/jobs/Advt_02_2021_Technical.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.