கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் 10.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/04/2023042480.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 107/1, நாவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம், அண்ணா நகர், தாந்தோன்றிமலை, கரூர் 639005.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/04/2023042480.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil