Advertisment

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!

கரூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 3 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி, ஆலோசகர், வழக்கு பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை தேசிய பசுமை தீர்ப்பாய வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

மைய நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், ஆலோசனை, உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட முன் அனுபவம் அவசியம்

சம்பளம்: ரூ. 30,000

முதுநிலை ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட முன் அனுபவம் அவசியம்

சம்பளம்: ரூ. 20,000

வழக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள் சமூகவியல், சமூக உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட முன் அனுபவம் அவசியம்

சம்பளம்: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/04/2023041354.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/04/2023041354.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Karur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment