Karur Social welfare department recruitment: தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கரூர் மாவட்டம், சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மைய நிர்வாகி, வழக்கு கையாளுபவர், ஓட்டுனர், பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 08 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மைய நிர்வாகி (Centre Administrator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s of Social Work, Counselling Psycology or Development Management or Law படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.30,000
வழக்கு கையாளுபவர் (Case Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,000
ஓட்டுனர்/ காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
தகுதி : ஒட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000
பல்நோக்கு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
தகுதி : சமையல், வீட்டு வேலை செய்ய நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.6,400
வயது தகுதி: இந்த பணியிடங்களுக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/01/2022012820.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர்</p>
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/01/2022012820.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil