கடந்த திங்களன்று நடை பெற்ற ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஒரு சரித்திரம் நடந்தேரியுள்ளது. பி.டெக் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்ற கவிதா கோபால் இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய- ஜனாதிபதி பரிசைத் தட்டிச் சென்றார். இதற்கு முன்னாடி, வெறும் ஆண்கள் மட்டுமே இந்த பரிசை வாங்கி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜனாதிபதி பரிசோடு மட்டும் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த பி.டெக் சிறந்த மாணவருக்கான விஸ்வேஸ்வரையா நினைவு பரிசையும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கியதற்கு கொடுக்கப்படும்
பி ரவிச்சந்திரன் நினைவு பரிசையும் என மொத்தம் மூன்று பரிசையும் தன்னிச்சையாய் தட்டிச் சென்றார்.
கவிதா கோபாலின் 9.95 என்ற கணக்கில் பி.டெக் படிப்பை முடித்த கவிதாகோபால் தற்போது பெங்களூருவில் இருக்கும் கூகிள் இந்தியா, மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
11 ம் வகுப்பை கேந்திரியா வித்யாலயாப் பள்ளி கவிதா கோபாலுக்கு ப்ரோக்ராமிங் மற்றும் கணினி அறிவியலில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 2015-க் சென்னை தனது கனவுக் கோட்டையான சென்னை ஐஐடிக்குள் நுழைந்தார். c++, ப்ய்தான், பிக் டேட்டா போன்றவைகளில் நுணுக்கங்களை நன்கு கற்றிந்து, பல போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.