கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான முடிவுகள் கடந்த புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் டெல்லியிலுள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் வசந்த்கஞ்ச் சிபிஎஸ்இ மாணவி காவியா சோப்ரா 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இந்திய அளவில் பெண்களில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த தேர்வில் முழு மதிப்பெண்களையும் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
காவியா, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 99.978 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். இந்த மதிப்பெண் குறித்து திருப்தி அடையாத காவியா மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வை எழுத விரும்பினார். இம்முறை 99.98 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக எடுக்க கூடாது என முடிவு செய்து படித்தார்.
காவியா பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வுக்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த படித்தார். அதனால் அவரால் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. எனவே மார்ச் மாத தேர்வுக்கு வேதியியல் பாடத்திற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்தி இம்முறை 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர் ஜேஇஇ தேர்வுகளுக்கு ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் செலவிட்டு படித்து இவ்வெற்றியை பெற்றுள்ளார்.
காவியா ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றால் ஐ.ஐ.டி மும்பையில் பொறியியலில் கணினி அறிவியல் பிரிவை தேர்வு செய்வார் என்று அவரது தாயார் ஷிகா சோப்ரா தெரிவித்துள்ளார். ஷிகா சோப்ரா ஒரு கணித ஆசிரியர். அவரது கணவர் ஒரு மென்பொருள் பொறியாளர்.
மார்ச் மாதம் நடைப்பெற்ற தேர்வில் 6.19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 13 மாணவர்கள் 100 சதவீதம் பெற்றுள்ளனர். பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 9 மாணவர்கள் 100 சதவீதம் பெற்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil