பாதுகாப்பு மற்றும் துணை ராணுவ வீரர்கள் உட்பட இடமாற்றம் செய்யக்கூடிய மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்காக உருவாக்கப் பட்டதுதான் கேந்திரிய வித்யாலய சங்கதன். இதன் கீழ், 1067 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 1,209,138 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அமைப்பின் தலைவர் மனித வள மேம்பாட்டுத் துறையின் முதன்மை அமைச்சர் ஆவார்.
இந்த பள்ளிகளில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓவ்வொருவருக்கும் 10 இடங்கள் ஒதுக்கபட்டுள்ளது. அதாவது, ஒரு எம்.பி அதிகபட்சம் தனது தொகுதியில் உள்ள 10 பேருக்கு இந்த பள்ளிகளில் பரிந்துரைக்க முடியும். ஆனால், இந்தியாவின் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் கட்டுப்பாடு இல்லாமல் எத்தனை பேரை வேண்டுமானாலும் இந்தப் பள்ளிகளில் பரிந்துரைக்லாலம்.
தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் தவகல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2018-19 ஆண்டினில் மட்டும் 8,164 மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். மனித வள மேம்பாட்டு அமைச்சர் மட்டும் 9,402 மாணவர்களை பரிந்துரைத்துள்ளார்.
2014-ம் ஆண்டை விட 2018-19 மனித வள மேம்பாட்டு அமைச்சரின் பரிந்துரை 20 மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/kv-300x175.png)
மொத்த மாணவர்கள் சேர்கையில், இந்த இரண்டு கோட்டாக்கள் மூலம் சேர்ந்த மாணவர்களின் சதவீதம் 2014-15 லில் 2.87 ஆகவே இருந்தது. 2015-16 களில் இவை 4.83 சதவீதமாக உயர்ந்து, 2016 க்கு மேல் 10 சதவீதத் தையும் தொட்டது.
கேந்திரிய வித்யாலய சங்கதன் கமிஷ்னராக இருக்கும் சந்தோஷ் குமார் மால் இது பற்றி கூறுகையில், "அமைச்சர் பரிந்துரைப்பதற்கு கட்டுபாடும் ஏதும் கிடையாது" என்று தெரிவித்தார்.
2010 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராய் இருந்த கபில் சிபல் இந்த இரண்டு கோட்டாவையும் ரத்து செய்தார். பின், பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட எதிர்ப்புக் காரணமாக இரண்டு மாதகளுக்குப் பிறகு மீண்டும் எம்.பி கோட்டா நடைமுறையை மட்டும் அமல்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.
மே 26, 2014- ல் ஆட்சி அமைத்த பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணி மீண்டும் அமைச்சர் கோட்டாவை நடைமுறைக்கு கொண்டுவந்தார். மார்ச் 31, 2015 வரை சேகரித்த தகவளின் படி ஸ்மிர்தி இராணி 450 மாணவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.