பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து NCERT நீக்கியுள்ள அனைத்து பகுதிகளையும் தொகுத்து, மாணவர்கள் படிக்கவும், தேர்வு எழுதவும் புதிய பாடப்புத்தகத்தை உருவாக்கிய ஒரே மாநிலம் இது என்று கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முன்மாதிரியான கல்விப் பின்னணிக்கு ஏற்ப அரசாங்கம் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததாக சிவன்குட்டி கூறினார்.
தேசியக் கல்விக் கொள்கை 2023-ஐ அமல்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் UDF எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்தப்போது சிவன்குட்டி இவ்வாறு கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் முழுவதுமாக நிராகரித்துள்ளதால், கர்நாடகா சில பகுதிகளை மட்டுமே செயல்படுத்த ஒப்புக்கொண்டதால், நாட்டில் இந்தக் கொள்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று சிவன்குட்டி கூறினார்.
மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களிலிருந்து, மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் அதில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு, இந்தியாவில் முகலாய ஆட்சி மற்றும் பேரரசின் சில பகுதிகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சில பகுதிகள் மற்றும் சில வகுப்புவாத கலவரங்கள் போன்ற பல விஷயங்களை நீக்கியுள்ளது, என்று அமைச்சர் கூறினார்.
“எனவே, நீக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் தொகுத்து புதிய பாடப்புத்தகத்தை உருவாக்கினோம். இது வெறும் பாடப்புத்தகம் அல்ல, மாணவர்கள் படித்து தேர்வு எழுதக்கூடிய பாடத்திட்டம்,'' என்று சிவன்குட்டி கூறினார்.
துணை பாடப்புத்தகங்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
புத்தகங்களை வெளியிடும் போது, பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து முக்கியப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டதற்காக என்.சி.இ.ஆர்.டி.,யை கடுமையாக விமர்சித்த பினராயி விஜயன், வெறுப்பு மற்றும் குரோதத்தில் வேரூன்றிய சமூகத்தை உருவாக்கும் அரசியல் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“