Advertisment

கூடன்குளம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு; 183 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 183 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kudankulam nuclear plant

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 183 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய பொதுத்துறை நிறுவனமான கூடன்குளம் அணுமின் நிலையத்தில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 183 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

TRADE APPRENTICES

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 183

Fitter – 56

Machinist - 25

Welder (Gas & Electric) - 10

Electrician – 40

Electronic Mechanic - 20

Pump Operator cum Mechanic - 7

Instrument Mechanic - 20

Mechanic Refrigeration and Air Conditioning - 5

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 7,700 - 8,855

வயது தகுதி: 31.07.2023 அன்று 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.apprenticeshipindia.org/ என்ற இணையதளத்தில் பதிவுச் செய்துக்  கொள்ள வேண்டும். பின்னர் https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: Senior Manager (HR), HR Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District-627106

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023

மேலும் விவரங்களுக்கு https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment