நீட் தேர்வு: கட்ஆஃப் கணக்கீடு முறை, கடந்தாண்டு மார்க் தெரிஞ்சுக்கோங்க!
அலன், ஆகாஷ் போன்ற பல பயிற்சி மையங்கள் நீட் தேர்வின் ஆன்சர் கீயை வெளியிட்டுள்ளன. மாணவர்கள் அதனை பரீசிலித்த தங்களது உத்தேச மார்க்கை கணக்கிட்டு கொள்ளலாம்.
நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 16.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வின் ஆன்சர் கீ செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் neet.nta.nic.in இணையதளத்தில் தேசிய தேர்வுகள் முகமையத்தால் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.
Advertisment
இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே, அலன், ஆகாஷ் போன்ற பல பயிற்சி மையங்கள் நீட் தேர்வின் ஆன்சர் கீயை வெளியிட்டுள்ளன. மாணவர்கள் அதனை பரீசிலித்த தங்களது உத்தேச மார்க்கை கணக்கிட்டுக் கொள்ளலாம். மார்க் மதிப்பிடுவது மூலம் தோராயமான கட்ஆஃப் மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, எந்த கல்லூரியில் சேர முடியும் என்பதை கண்டறிய உதவியாக இருக்கும்.
நீட் மார்க்கணக்கிடுவது எப்படி? step 1: உங்களது தேர்வுதாளின் குறியீட்டு எண்ணுக்கான நீட் ஆன்சர் கீ டவுன்லோடு செய்ய வேண்டும் step 2: சரியான மற்றும் தவறான பதிலை முதலில் எண்ண வேண்டும். step 3: ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் கணக்கிடுங்கள். அதே சமயம், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண்ணை மைனஸ் செய்வது மூலம், நீட் மதிப்பெண்ணை கணக்கிட முடியும் நீட் மார்க் மதிப்பெண் பார்முலா நீட் மார்க்= சரியான விடை*4 – தவறான விடை* 1 நீட் 2021 கட்-ஆஃப்: சாத்தியமான மதிப்பெண்களைக் கணக்கிட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான நீட் கட் ஆஃப் சதவிகிதம் மற்றும் மதிப்பெண்ணை கணக்கிடலாம். ஒவ்வொரு ஆண்டும் கட் ஆஃப் சதவிகிதம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால், மார்க் வேறுபட வாய்ப்புள்ளது.
நீட் கடந்தாண்டு கட்-ஆஃப் சதவிகிதம் மற்றும் மதிப்பெண்கள்:
பிரிவு
கட்ஆப் சதவிகிதம்
கட்ஆஃப் மார்க் (2020)
பொதுபிரிவு
50 %
720-147
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி
40 %
146-113
பொது பிரிவு (ph)
45 %
146- 129
எஸ்சி,எஸ்.டி,ஓபிசி (ph)
40 %
128 -113
நீட் கவுன்சிலிங்
நீட் தேர்வு முடிவுகள், அக்டோபர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து, கவுன்சிலிங் செயல்முறை தொடங்குவுள்ளது. நீட் கவுன்சிலிங்கில், அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) அடிப்படையில் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும், மீதமுள்ள 85 சதவீதம் மாநில ஒதுக்கீடாக இருக்கும் மெடிக்கல் கவுன்சில் கமிட்டி (MCC)15 சதவிகித இடங்களுக்கு மட்டுமே மூன்று சுற்றுகளில் கவுன்சிலிங்கை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.