மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை, மாணவர்களின் மின்னஞ்சலுக்கு என்டிஏ நேரடியாக அனுப்பியது. மேலும், என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்திலும் மாணவர்கள் நீட் ஸ்கோர் கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 3 மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர். நீட் 2021 கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. கட்ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள்.
நீட் கவுன்சிலிங் பிராசஸில் ரெஜிஸ்ட்ரேஷன், பணம் செலுத்ததல், விருப்ப கல்லூரி தேர்ந்தெடுத்தல், கல்லூரி முடிவு செய்தல், இருக்கை ஒதுக்கீடு, சம்பந்தப்பட்ட கல்லூரியில் ரிப்போட் செய்வது ஆகியவை ஆகும். கவுன்சிலிங் செயல்முறை விரிவாக இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
நீட் 2021 கவுன்சிலிங் பிராசஸ்
ரெஜிஸ்ட்ரேஷன்
நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். உங்களின் ரோல் நம்பர், ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், பெயர் மற்றும் லாகினுக்கு தேவையான விவரங்களை பதிவிட்டு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
கவுன்சிலிங் கட்டணம்
நீட் கவுன்சிலிங் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, உங்களின் விண்ணப்பம் அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும்.
விருப்ப கல்லூரி தேர்வு
விண்ணத்தாரர்கள் விருப்ப பாடத்திட்டம் மற்றும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படும். ஒருவர் எத்தனை பாடம், கல்லூரிகளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் விருப்பத்தை தேர்ந்தெடுத்துவிட்டு லாக் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்ய தவறும்பட்சத்தில், அவர்கள் கிளிக் செய்ய ஆப்ஷன் தானாகவே லாக் செய்யப்படும்.
இருக்கை ஒதுக்கீடு
DGHS விண்ணப்பத்தாரரின் விருப்பங்களை பரிந்துரைத்து இருக்கை காலியாக உள்ள கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்து, கல்லூரி முடிவு செய்த அறிவிப்பை உங்களுக்கு அனுப்பும்.
சம்பந்தப்பட்ட கல்லூரியில் ரிப்போட்
நீட் 2021 கவுன்சிலிங்கின் இறுதி ஸ்டேப், உங்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியில், மாணவர்கள் ரிப்போட் செய்ய வேண்டும்.
முதலில் 15% அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும், அதனை தொடர்ந்து அந்தந்த மாநில அதிகாரிகளால் 85 இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் நடத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil