/indian-express-tamil/media/media_files/b3tFPht5pUnCzRBzPn1H.jpg)
கோவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான பருத்தி ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டின் கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
Senior Research Fellow
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M Sc. (Agricultural) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Young Professional-I
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc. in Agriculture/ Botany/ Zoology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
Young Professional-II
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BE/BTech (Computer Science and Engineering/IT/Artificial Intelligence and Data Science) or MCA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 42,000
Young Professional-I
காலி இடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduation in BCA or Commerce படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
Young Professional-I
காலி இடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: B.Sc. Agriculture படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஜூன் 10, 11, 12
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station, Maruthamalai Road, Coimbatore – 641 003, Tamil Nadu
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cicr.org.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.