கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறந்த மாணவ மாணவியர் விருதும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவித்தனர்.
அரசு பள்ளிகள் கல்வித்துறையில் பெரும் அளவில் சாதனையை செய்து வருகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதனால் அனைவரும் கல்வி கற்பதில் பெரும் முயற்சி எடுத்து தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கோவை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி சார்பாக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 180 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் 1796 பேருக்கு சிறந்த மாணவ மாணவியர் விருதும், மற்றும் 1210 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதும், 153 பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த தலைமை ஆசிரியர் விருதும், மற்றும் 28 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் அவர்கள் பேசும்போது கல்வி மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகும். அதை பள்ளி பருவ காலத்தில் நம் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று கல்வியை மிகச் சிறப்பாக கற்றால் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் வெற்றி பாதையை நோக்கி முன்னேறலாம். அதனால் கல்வியாளர்களின் பொருளாதார முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றம் ஆகியவை சிறப்பான உச்சத்தை தொடும் என்று கூறினார்கள்.
மேலும் அரசு பள்ளிகள் கல்வித்துறையில் பெரும் அளப்பரிய சாதனையை செய்து வருகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அனைவரும் கல்வி கற்பதில் பெரும் முயற்சி எடுத்து தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கே.ஜி கல்வி குழுமத்தின் சேர்மன் பக்தவச்சலம் தலைமை வகித்தார். கே.ஜி கல்விக் குழுமத்தின் மேனேஜிங் டிரஸ்டி அசோக் பக்தவச்சலம் வரவேற்று பேசினார். மேலும் கல்லூரியின் பிரின்ஸ்பல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை