தமிழ்நாட்டின் கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25.11.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: பழநி முருகன் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 10
உதவியாளர் (Multi-Tasking Staff)
காலி இடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினர் 32 வயது வரையிலும், OBC மற்றும் பிரிவினர் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,000
எழுத்தர் (Lower Division Clerk)
காலி இடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினர் 32 வயது வரையிலும், OBC மற்றும் பிரிவினர் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 19,900
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
காலி இடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.Sc Botany or B.Sc Agri படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : EWS பிரிவினர் 21 வயது 30 வயது வரையிலும், OBC பிரிவினர் 21 வயது முதல் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 29,200
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ifgtb.icfre.org/advertisements.php என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பக் கட்டணம்:
Multi-Tasking Staff: ரூ. 500 SC/ST மற்றும் பெண்களுக்கு ரூ. 250
Lower Division Clerk: ரூ. 1000 SC/ST மற்றும் பெண்களுக்கு ரூ. 500
Technical Assistant: ரூ. 1,500 SC/ST மற்றும் பெண்களுக்கு ரூ. 750
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ifgtb.icfre.org/advertisement/Advt_recruitment_MTS,%20LDC%20&%20TA_14%20oct%202022.PDF என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.