தமிழ்நாட்டின் கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் பல்நோக்கு உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30.09.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவியாளர் (Multi-Tasking Staff)
காலி இடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினர் 32 வயது வரையிலும், OBC மற்றும் பிரிவினர் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,000
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
காலி இடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: B.Sc Botany or B.Sc / Diploma in Computer Science or Information Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : EWS பிரிவினர் 21 வயது 30 வயது வரையிலும், SC பிரிவினர் 21 வயது முதல் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 29,200
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ifgtbrecruitment.org/IFGTB/Candidate/index என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2023
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1,500, ஆனால் SC/ST மற்றும் பெண்களுக்கு ரூ. 750. மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ifgtb.icfre.gov.in/jobs/vacancy40.01%202023.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“