Advertisment

கோவையில் வேலை வாய்ப்பு கருத்தரங்கம்; படையெடுத்த டிப்ளமோ, இன்ஜினியரிங் மாணவர்கள்

நான் முதல்வன் திட்டம் தந்த உத்வேகம்; கோவையில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்; பொறியியல், தொழில்நுட்ப பயின்ற பட்டதாரிகள் மற்றும் பட்டய படிப்பு படித்த ஆயிரம் பேர் பங்கேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kovai employment camp

கோவையில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்; பொறியியல், தொழில்நுட்ப பயின்ற பட்டதாரிகள் மற்றும் பட்டய படிப்பு படித்த ஆயிரம் பேர் பங்கேற்பு

நான் முதல்வன் திட்டம் தந்த உத்வேகத்தின் அடிப்படையில் - கோவையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று நடைபெற்றது.

Advertisment

இந்தக் கருத்தரங்கம் பொறியியல், தொழில்நுட்பம் படிக்கும் மாணாக்கர்கள் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோரின் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இதையும் படியுங்கள்: தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி; இந்த ஆண்டு நடக்குமா?

publive-image

படித்த பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு, அவர்கள் துறை சார்ந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான திறன் மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. உள்நாட்டு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கையும் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் அசட் சொசைட்டி அமைப்பு சார்பில், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றன. இதில் உள்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

publive-image

இன்று நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை உள்ளடக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

publive-image

இதுகுறித்து அசட் சொசைட்டி அமைப்பின் தலைவர் ஆனந்த் தயாள குரு பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது; நான் முதல்வன் திட்டம் தந்த உத்வேகத்தின் அடிப்படையில், அதனை முன் மாதிரியாக கொண்டு படித்த பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தருகிறோம்.

publive-image

ஆர்கிடெக்ட், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என பொறியில் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்து வருகிறோம்.

நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு அவர்களை தயார்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சியும் வேலைவாய்ப்பு பெற்று தரும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். நடப்பாண்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பும், ஆயிரம் நபர்களை தொழில் முனைவோராக உருவாக்கவும் அசட் சொசைட்டி சார்பில் திட்டமிட்டிருக்கிறோம். 100% வேலை வாய்ப்பை பெற்று தர திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசாங்கத்தின் நான் முதல்வன் திட்டத்துக்கு நன்றி. இதுபோன்ற திட்டங்களில் சேர்ந்து பயணிக்க விரும்புகிறோம்.

publive-image

தமிழ்நாடு அரசாங்கத்தின் டிரில்லியன் டாலர் எக்கானமி கனவை நனவாக்கும் விதமாக அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும். நாட்டின் அனைத்து துறைகளில் பொறியியல், தொழில்நுட்பம் பெருமளவில் பங்காற்றும் நிலையில், இத்துறை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி நாட்டின் தொழில் வளத்தை பெருக்க வேண்டும்.

publive-image

நமது நாட்டில் உள்ள பட்டதாரிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்கம் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையிலே, எங்களை போன்ற தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்த பயணிக்கும் போது எளிதாக இலக்கை அடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Coimbatore Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment