கோவையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற உள்ள தென்னிந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கலாச்சார மற்றும் விளையாட்டு விழா மார்ச் 21 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை குமரகுரு கல்லூரியின் சார்பாக நடைபெற உள்ள தொழில்நுட்ப கலாச்சார மற்றும் விளையாட்டு விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள சைமா அரங்கில் நடைபெற்றது.
அப்போது குமரகுரு கல்லூரியை சேர்ந்த விஜிலேஷ் விழா குறித்து கூறியதாவது, கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டு தோறும் யுகம் எனும் நிகழ்ச்சி சமூக நோக்கத்திற்க்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
12 ஆவது ஆண்டாக இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மார்ச் 21 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஜெனித் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், மற்றும் கலைஞர்கள் தங்களது பல்வேறு திறன்களை வெளிபடுத்தும் வகையில் இந்த ஆண்டுக்கான யுகம் 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்புடன் புதிய பங்கேற்பாளர்களின் திறன்களை வெளிபடுத்தவும் அதனை மேம்படுத்தவும் உள்ளனர்.
இதில் 105க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுடன், 60க்கும் மேற்பட்ட பயிற்சி பட்டறைகள் நடத்த பட உள்ளது. இதில் சிறந்த கண்டுபிடிப்புகள், அதனை காட்சி படுத்துதல், அதனை வெளிபடுத்தும் திறன் என்ற அடிப்படையில் பல்வேறு பரிசுகளும் வழங்கபட இருக்கிறது.
மேலும் இந்த விழாவில், என். மகாலிங்கம் சுழற்கோப்பை, ஐசா விருதுகள், மாணவர்களுக்கான காலநிலை நடவடிக்கை பற்றிய கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், நில அதிர்வு வடிவமைப்பு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொது குமரகுரு கல்லூரியை சேர்ந்த ஷீலா, மற்றும் மாணவர்கள், சந்தியா, கவின், சித்தார்த், ஆல்வின், வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“