/indian-express-tamil/media/media_files/2025/08/14/kovai-college-graduation-2025-08-14-15-01-51.jpeg)
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், பட்டமளிப்பு விழா வெகு விமரசையாக நடைபெற்றது. நான்கு தனித்தனி அமர்வுகளாக நடைபெற்ற இதில், சமூக அறிவியல், அடிப்படை அறிவியல், கணக்கீட்டு அறிவியல், வணிகம் மற்றும் மனிதவியல் மேலாண்மைத் துறைகளை சேர்ந்த 2540 மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் தரவரிசை பெற்ற 50 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தாளாளர் நந்தினி தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் யசோதா தேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.
நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இதில், புது தில்லியில் உள்ள இந்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர். இயக்குநர் ஜெனரல் மற்றும் செயலாளர் டாக்டர் என். கலைச்செல்வி, சென்னை ஐ.சி.டி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் வெங்கட்ராமன், இந்திய அரசின் தேசிய நிபுணர் ஆலோசனைக் குழுவின் தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அடல் இன்னோவேஷன் மிஷனின் முன்னாள், இயக்குநர் மற்றும் புது தில்லியில் உள்ள நிதி ஆயோக்கின் கூடுதல் செயலாளர் ரமணன், தேசிய சூரிய ஆற்றல் நிறுவனத்தின் (NISE) இயக்குநர் ஜெனரல், உத்தரபிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் பேராசிரியர் டாக்டர் முகமது ரிஹான், ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், கல்லூரியில் கல்வி படிப்பை முடித்து செல்லும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு தேடுபவர்களாக இல்லாமல்,வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக, பூமிக்கும் அதற்கு அப்பாலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது பட்டதாரிகளின் கடமை என குறிப்பிட்டனர்.
மேலும், கல்வி அறிவு பெறும் வாய்ப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும் என பட்டதாரிகளை நினைவூட்டினர். மேலும் கல்வி முடித்து செல்லும் பெண்கள் தங்களது திறன்களை பயன்படுத்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதுமையான கண்டு பிடிப்புகளை கண்டு பிடிப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ள இந்திய நாட்டில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகம் வர வேண்டும் என தெரிவித்தனர். குறிப்பாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் இளம் தலைமுறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மின்சாரத்தை மதிப்புடன் பயன்படுத்தவும், தினமும் ஒரு மணி நேரம் பகுப்பாய்வு திறனை வளர்க்கவும், மாணவர்கள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டனர்.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பி. ஹாரதி, இயக்குநர்கள், டீன்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.