கோவை பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Kovai SACON recruitment 2021 apply soon: கோவை பறவைகள் ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

கோவை பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் (Sálim Ali Centre for Ornithology and Natural History) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021

JUNIOR RESEARCH BIOLOGIST – I

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 17

கல்வித் தகுதி : அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 31,000 + HRA

RESEARCH ASSOCIATE – I

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் Ph.D முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 47,000 + HRA

PROJECT ASSOCIATE

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech./ M.Sc./ MCA degree in Computer Science or Information Technology  முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000 + HRA

JUNIOR RESEARCH BIOLOGIST – II

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 31,000 + HRA

SENIOR RESEARCH BIOLOGIST

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000 + HRA

PROJECT SCIENTIST

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : PhD in Chemistry/ Biochemistry. 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,000 + HRA

TECHNICAL ASSISTANT

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc. in Chemistry/ Biochemistry.

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000 + HRA

NATURE EDUCATION ASSISTANT

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18.10.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 31,000 + HRA

வயது சலுகை : மேற்கண்ட பணியிடங்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.sacon.in/careers/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஸ்கேன் செய்து PDF ஆக கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : recruitments@sacon.in  with a CC to rcsacon@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2021

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kovai sacon recruitment 2021 apply soon

Next Story
பொறியியல் படிப்பின் மீது இந்தாண்டு மீண்டும் அதிகரித்த ஆர்வம்… நிபுணர்கள் கூறுவது என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com