Kendriya Vidyalaya Admission 2025-26: கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) 2025-26 கல்வியாண்டிற்கான 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்கள் kvsonlineadmission.kvs.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு காலக்கெடுவிற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
ஆன்லைன் சேர்க்கை போர்ட்டலில் இருந்து விண்ணப்பச் சமர்ப்பிப்புக் குறியீட்டைப் பெறும் வரை, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படக்கூடாது என்பதையும், விண்ணப்பத் தரவு சங்கதனுக்கு தெரியாது என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பால்வடிகா (நிலைகள் 1, 2 மற்றும் 3) க்கான விண்ணப்பம் மார்ச் 21 அன்று இரவு 10 மணிக்கு முடிவடையும்.
வயதுத்தகுதி
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது 6 ஆண்டுகள். அனைத்து வகுப்புகளுக்கான வயது மார்ச் 31, 2025 அன்று மதிப்பிடப்படும். 2025-26 கல்வியாண்டிற்கான கேந்திரிய வித்யாலயா சேர்க்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இட ஒதுக்கீடு செய்யப்படும். பால்வடிகா 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான வயதுத் தேவைகள் மார்ச் 31, 2025 அன்று முறையே 3 முதல் 4 ஆண்டுகள், 4 முதல் 5 ஆண்டுகள் மற்றும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை இருக்கும்.
தேவையான ஆவணங்கள்
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) பள்ளிக்கான சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய, உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் மற்றும் தகவல்கள் தேவைப்படும்:
1). இந்திய சிம் கார்டுடன் தொடர்புடைய செல்லுபடியாகும் மொபைல் எண்.
2). செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி.
3). கேந்திரிய வித்யாலயாவில் சேர விரும்பும் குழந்தையின் டிஜிட்டல் புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட படம் (JPEG கோப்பு, அதிகபட்ச அளவு 256KB).
4). முகவரிச் சான்று மற்றும் சாதிச் சான்றிதழ் (JPEG அல்லது PDF கோப்பு) ஆகியவற்றுடன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
5. பெற்றோர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவின் (EWS) கீழ் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அதற்கான அரசாங்கச் சான்றிதழின் விவரங்கள்.
6. விண்ணப்பத்தில் சேவைச் சான்றுகள் பயன்படுத்தப்படும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் இடமாற்ற விவரங்கள்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் ஐந்து பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு தனி தாவலின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. பிரிவுத் தலைப்புகள் பின்வருமாறு:
– அடிப்படைத் தகவல்
– பெற்றோரின் விவரங்கள்
– பள்ளிகளின் தேர்வு
– ஆவணங்களைப் பதிவேற்றவும்
– பிரகடனம் மற்றும் சமர்ப்பிப்பு
ஒற்றைப் பெண் குழந்தை பிரிவின் கீழ் விண்ணப்பங்களுக்கு, பெற்றோர்கள் வேறு எந்த சேர்க்கை விண்ணப்பத்திற்கும் செய்வது போலவே ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். குழந்தை சேர்க்கை கோரும் வித்யாலயாவின் முதல்வரை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை.