/tamil-ie/media/media_files/uploads/2019/01/cats-25.jpg)
KVS Result 2019
KVS Result 2019 : கேந்திரிய வித்யாலயா சங்கதனில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பிஜிடி மற்றும் டிஜிடி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. அதன் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
KVS Result 2019 - பிஜிடி டிஜிடி தேர்வு முடிவுகள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசியராக பணியாற்ற விருப்பம் கொண்டவர்கள் டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 23ம் தேதி என இரண்டு நாட்களாக நடைபெற்றது. போஸ்ட் கிராஜூவேட் டீச்சர் (PGT) மற்றும் ட்ரெய்ண்ட் கிராஜூவேட் டீச்சர் ( TGT ) தேர்வின் முடிவுகளை நீங்கள் kvsangathan.nic.in என்ற இணைய தளத்தில் சென்று பார்வையிடலாம்.
தேர்வு செய்யப்பட்ட ஆசியர்கள் பட்டியலைக் காண
பட்டியலுடன் சேர்த்து நேர்முகத் தேர்வின் அட்டவணையும், கட் ஆஃப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த தகவல்கள் இண்டெர்வ்யூ லெட்டரில் இடம்பெற்றிருக்கும். தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள், நேர்முகத் தேர்விற்கு வரும் போது பயோ டேட்டா, என்.ஓ.சி / சர்வீஸ்/ விஜிலென்ஸ் சான்றிதழ்கள், ஓ.பி.சி. சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.