/indian-express-tamil/media/media_files/2025/05/19/iUF3DfLlbt01jPXPI5Ja.jpg)
தமிழகத்தில் 400 எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிப்பு: எந்த கேட்டகிரிக்கு எவ்வளவு இடம்? நீடிக்கும் சஸ்பென்ஸ்
தமிழ்நாட்டில் மருத்துவக் கலந்தாய்வின் 3வது சுற்றில் (Round 3) புதிதாக 400 MBBS இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவத் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. எனினும், இந்த 400 சீட் எந்தெந்தக் கல்லூரிகள் மற்றும் எந்தெந்தக் கேட்டகரிகளுக்குச் (Category) பிரித்து வழங்கப்பட்டு உள்ளது என்ற தெளிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து சி.எஸ்.கே. கரியர் கைடன்ஸ் அகாடமியின் சரவணக்குமார் தனது யூடியூப் சேனலில் வழங்கிய முழுமையான பகுப்பாய்வு மற்றும் விளக்கங்கள் பற்றி இங்கே காணலாம்.
400 இடங்கள் எங்கு அதிகரிப்பு?
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 400 எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் (Government Colleges) சேர்க்கப்படவில்லை. இந்த இடங்கள் அனைத்தும் தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் (Private and Self-Financing Colleges) மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமென எதிர்பார்த்தவர்களுக்கு, இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்க வாய்ப்பில்லை என்று சரவணக்குமார் கூறுகிறார்.
காலியிடங்கள் குறித்த சஸ்பென்ஸ் ஏன் நீடிக்கிறது?
400 சீட்கள் சேர்க்கப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், காலியிடங்கள் (Seat Vacancy) கல்லூரி வாரியாக (College-wise) மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் பிரிவு வாரியாக (Category-wise) (எ.கா: OC, BC, MBC, SC) இன்னும் வெளியிடப்படவில்லை. எந்தவொரு தரப்பினராலும், "உங்களுக்கு இந்த மார்க்கிற்கு இந்த ரேங்கில் சீட் கிடைக்குமா, கிடைக்காதா?" என்று உறுதியாகக் கூற முடியவில்லை. கேட்டகரி வாரியாக விவரம் வந்தால் மட்டுமே 95% துல்லியத்துடன் கூற முடியும் என்றும் கூறுகிறார் சரவணக்குமார்.
பி.டி.எஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கோட்டாவில் வாய்ப்பு
இந்த ஆண்டு மேனேஜ்மென்ட் கோட்டா (Management Quota) MBBS மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் பி.டி.எஸ். இடங்களுக்கான கட்ஆஃப் (Cutoff) மதிப்பெண்கள் கண்டிப்பாக மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த பிரிவுகளில் முயற்சி செய்பவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் (Choice Filling) சரியாக செய்ய வேண்டும். தவறாக சாய்ஸ் ஃபில் செய்திருந்தால், "கட்ஆஃப் குறைந்தும் நம்மால் அப்ளை செய்ய முடியவில்லையே" என்ற நிலைக்கு வர நேரிடலாம். புதிதாக பதிவு செய்பவர்கள், சீட் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், காலியாகக் காட்டப்படும் அனைத்து கல்லூரிகளையும் ஃபில் செய்யுமாறு அறிவுறுத்துகிறார் சரவணக்குமார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்ஆஃப் ஏன் சில கேட்டகரிகளில் குறையவில்லை என்பதற்கு, கடந்த ஆண்டு (2024) ரவுண்ட் 2 மற்றும் ரவுண்ட் 3 கலந்தாய்வின் முடிவு பகுப்பாய்வு ஒரு உதாரணத்தை அளிக்கிறது.
| கேட்டகரி | கட்ஆஃப் மாற்றம் | காரணம் |
| எம்.பி.சி | கட்ஆஃப்/ரேங்கில் மாற்றம் இல்லை (0) | ரவுண்ட் 3 வரை, எம்.பி.சி. பிரிவில் இணைந்த யாரும் விலகாததால் காலியிடங்கள் வரவில்லை. |
| எஸ்.சி | கட்ஆஃப்/ரேங்கில் மாற்றம் இல்லை (0) | எஸ்.சி. பிரிவில் யாரும் விலகவில்லை. எனவே காலியிடம் வரவில்லை |
| ஓசி, பிசி, பி.சி.எம் | கட்ஆஃப்/ரேங்க் குறைந்துள்ளது | இந்த பிரிவுகளில் இணைந்த மாணவர்கள் சிலர் விலகியதால் காலியிடங்கள் ஏற்பட்டு, ரேங்க் குறைந்துள்ளது |
முக்கியப் பாடம்: காலியிடங்கள் ஒரு கேட்டகரியில் உருவாகினால் மட்டுமே, அந்தக் கேட்டகரிக்கான கட்ஆஃப் குறையும். மொத்த சீட் வேகன்சியைப் பார்த்துவிட்டு, எனக்கு அடுத்த ரேங்க்தான் உள்ளது, அதனால் கிடைத்துவிடும் என்று உறுதியாகக் கருத முடியாது.
பி.டி.எஸ் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அதிக வாய்ப்புகள்
சுயநிதிக் கல்லூரிகளின் பி.டி.எஸ்: இந்த ஆண்டு கட்ஆஃப் குறைப்புக்கு பெரும் பங்கு வகிக்கும் இடங்கள் இவைதான். பி.டி.எஸ்-ல் சீட் கிடைத்த பல மாணவர்கள் அப்கிரேடேஷன் (Upgradation) மூலம் எம்.பி.பி.எஸ்-க்குச் செல்வார்கள். இதனால் பி.டி.எஸ்-ல் அதிகப்படியான சீட் காலியாகும்.
மேனேஜ்மென்ட் கோட்டா (MBBS): அகில இந்திய அளவில் டீம்ட் யுனிவர்சிட்டிகளில் (Deemed Universities) இடங்கள் அதிகரித்துள்ளதால், மேனேஜ்மென்ட் கோட்டாவில் போட்டி குறையும். இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கட்ஆஃப் 100 முதல் 200 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என்கிறார் சரவணக்குமார்.
மொத்த காலியிடங்களின் விவரம்
தமிழக மருத்துவத் தேர்வில் காலியாக உள்ள இடங்களின் ஒப்பீடு (தோராயமாக):
| கோட்டா/கல்லூரி | கடந்த ஆண்டு (642) | இந்த ஆண்டு (1061) | அதிகரிப்பு |
| அரசு எம்.பி.பி.எஸ் | 642 | 1061 | 419 |
| அரசு பி.டி.எஸ் | 33 | 120 | 87 |
| சுயநிதி எம்.பி.பி.எஸ் | 103 | 308 | 205 |
| சுயநிதி பி.டி.எஸ் | 62 | 53 | -9 |
| பிரைவேட் யூனிவர்சிட்டி எம்.பி.பி.எஸ் | 47 | 163 | 116 |
தற்போதைய மொத்த காலியிடங்கள்: 161 (அரசு கோட்டா + பிரைவேட் யூனிவர்சிட்டிஸ்).
7.5% இட ஒதுக்கீடு குறித்த அறிவுரை
7.5% இட ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கு சுயநிதிக் கல்லூரிகளில் (Self-Financing Colleges) இடம் கிடைப்பது வரப்பிரசாதம். அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்திவிடுவதால், சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று தயங்காமல், கட்டாயம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறார் சரவணக்குமார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us