பி.இ, பி.டெக் தகுதி... இந்த வாரம் அப்ளை பண்ண வேண்டிய அரசுப் பணிகள்; நீங்க ரெடியா?

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, பொறியியல் (B.E., B.Tech.) உட்பட பல்வேறு தகுதிகளுடன் இந்த வாரம் (செப்.29 முதல் அக்.11 வரை) விண்ணப்பிக்க வேண்டிய மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

author-image
Meenakshi Sundaram S
New Update
tn govt jobs

பி.இ, பி.டெக் தகுதி... இந்த வாரம் அப்ளை பண்ண வேண்டிய அரசுப் பணிகள்; நீங்க ரெடியா?

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, பொறியியல் (B.E., B.Tech.) உட்பட பல்வேறு தகுதிகளுடன் இந்த வாரம் (செப்.29 முதல் அக்.11 வரை) விண்ணப்பிக்க வேண்டிய மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Advertisment

1. பொறியியல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கான வாய்ப்புகள்

நிறுவனம்/துறைபணியிடங்கள் (மொத்தம்)முக்கிய பதவிகள்/பிரிவுமுக்கியத் தகுதிகடைசி தேதி
பாரத ஸ்டேட் வங்கி (SBI)    59மேனேஜர், துணை மேனேஜர்பி.இ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ (3-5 ஆண்டுகள் அனுபவம்)    02/10/2025
நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL)98கிராஜுவேட் இன்ஜினியர் ட்ரைனி (கெமிக்கல், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்)பி.இ, பி.டெக்    10/10/2025
கர்நாடக வாகனத் தொழிற்சாலை (ஒப்பந்த அடிப்படையிலானது)20ஜூனியர் இன்ஜினியர் (ஒப்பந்த அடிப்படை)பி.இ, பி.டெக், எம்.பி.ஏ    11/10/2025

2. மத்திய அரசின் பிற பணியிடங்கள்

ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி (EMRS): இந்த மத்திய அரசுப் பள்ளிகளில் 7,267 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வர், முதுநிலை/இளநிலை பட்டதாரி ஆசிரியர், அக்கவுண்டன்ட், ஆய்வக உதவியாளர் மற்றும் நர்ஸ் போன்ற பிரிவுகளுக்கு இளநிலை/முதுநிலை பட்டப்படிப்பு, பி.எட், பி.எஸ்சி. நர்சிங் போன்ற தகுதியுடையோர் 23/10/2025 வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC): மெடிக்கல் ஆபீசர், அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சட்ட ஆலோசகர் மற்றும் பேராசிரியர் உட்பட 213 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பி.எல், எம்.பி.பி.எஸ், பி.எட் போன்ற தகுதியுடையோர் 02/10/2025 வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisment
Advertisements

ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனம் (ECGC): அப்ரண்டிஸ் பிரிவில் 25 பணியிடங்கள் (தமிழ்நாட்டுக்கு 8) உள்ளன. ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 05/10/2025 வரை விண்ணப்பிக்கலாம்.

3. தமிழக அரசின் நேரடி நேர்காணல் வாய்ப்பு

குழந்தைகள் நலன் சிறப்பு சேவைத்துறை (தமிழக அரசு): ஐடி சூப்பர்வைசர், ஹெல்ப்லைன் அட்மின், கால் ஆப்ரேட்டர் ஆகிய 12 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் (Interview) மட்டுமே தேர்ச்சி முறையாகும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 03/10/2025.

4. கல்வி நிறுவனப் பணிகள்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM), திருச்சி: இளநிலை உதவியாளர், நிர்வாக உதவியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 14 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு. கடைசி தேதி- 21/10/2025. தேர்வர்கள் தங்களுக்குரிய கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Educational News Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: