தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 20-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரிய தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் – 2024ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2024, நாள் 09.02.2024 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியிருந்தனர்.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 20-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01/2024, நாள் 09.02.2024 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“