SBI Exam Apply Online : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஜூனியர் அசோசியேட்ஸ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் ( ஜனவரி 26) முடிவடைகிறது . அறிவிக்கப்பட்ட 8,000 பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை, மற்றும் விற்பனைத் துறையில் பணி அமர்த்தப்படுவார்கள் . தமிழ்நாட்டில் மொத்தம் 393 பணியிடங்கள அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தாங்கள் வின்னைப்பிக்கும் மாநில மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் நிரூபிக்க வேண்டும். நீங்கள் 10/12 வகுப்பில் உங்கள் மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த சோதனை உங்களுக்கு கிடையாது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் துறையில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் bank.sbi/web/careers என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதி பெற குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். உயர் வயது வரம்பு 28 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உச்ச வரம்பில் இடஒதுக்கீடு தேர்வர்களுக்கு தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
- எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும் (bank.sbi/web/careers)
- அங்கு வலது பக்கத்தில் இருக்கும் சமீபத்திய அறிவிப்புகள் (Latest Announcement) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- அதில், எஸ்பிஐ RECURITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES ) என்ற லிங்கை க்ளிக் செய்க,
- இப்போது திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் LOGIN if already Registered என்றும், Click for New Registration என்றும் இரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
- ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்திருந்தால், LOGIN if already Registered க்ளிக் செய்து, ரெஜிஸ்டர் எண், பாஸ்வேர்டு, செக்யூரிட்டி கோட் பதிவிட்டு நேராக விண்ணப்பிக்கலாம்.
- இல்லையெனில், Click for New Registration க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
தேர்வு கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ .750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு முறை :
முதல்நிலை தேர்வு
ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது. 100 அப்ஜெக்டிவ் கேள்விகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு (1/4 விகுதியில்). தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படும்.
முதன்மை தேர்வு
190 அப்ஜெக்டிவ் கேள்விகள் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கேற்ப நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு (1/4 விகுதியில்).
பொது ஆங்கிலத்தை தவிர, அனைத்து கேள்விகளும் இந்தி, ஆங்கிலம் என இரட்டை மொழியில் கேட்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.