8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்… தேர்வுகள் ரத்து: இங்க இல்லிங்க, உபியில்!

தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இறுதி தேர்வுகள் எழுதாமல் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

By: Updated: March 18, 2020, 06:20:45 PM

All UP govt school students of classes 1 to 8 to get promoted : கொரோனா வைரஸ் தொற்றைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இறுதி தேர்வுகள் எழுதாமல் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. தொடக்கப் பள்ளிகளின் இறுதி தேர்வு, வரும் மார்ச் 23 முதல் 28 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் ரேணுகா குமார் வெளியிட்ட உத்தரவில் “அடிப்படை கல்வித் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அடுத்தடுத்த  வகுப்புகளுக்கு  பரீட்சை இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள். ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன ”என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளன.

மாநிலத்தில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமாக்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை மூடுவதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்தது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்தும் வகையில் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நெறிமுறையையும் அமல்படுத்தியது.

போட்டி தேர்வுகள் உட்பட  பிற தேர்வுகளும் வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Latest coronavirus updates classes 1 to 8 to get promoted without exams yogi adiyanath government coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X