Legal notice to Tamilnadu school mentioning farmers as violent miscreants Tamil News : இந்திய தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் "வெறி பிடித்தவர்கள்" மற்றும் "வன்முறை குற்றவாளிகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது என டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆர்யா சமாஜ் கல்விச் சங்கத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வழக்கறிஞர் ஹர்பிரீத் சிங் ஹோரா அனுப்பிய நோட்டீஸில், பள்ளியின் கேள்வி வடிவிலிருந்த கருத்துக்கள் விசாரணையில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், இதுபோன்ற கருத்துக்கள் பள்ளியின் "முறைகேடு" என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"வேளாண் சட்ட எதிர்ப்பாளர்கள்" பொதுச் சொத்துக்களை அழித்தார்கள் என்றும் 'பகல் நேரத்தில் காவல்துறையினரைத் தாக்கினார்கள்' என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அதேசமயம் இந்த பிரச்சினை காவல்துறையினரால் விசாரணைக்கு உட்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. உங்களுடைய இத்தகைய செயல், அந்த விசாரணையில் குறுக்கீட்டை உருவாக்கும் நோக்கம் மட்டுமே" என்று தலைமை கல்சா திவானின் உறுப்பினரான ஜஸ்விந்தர் சிங் சார்பாக அனுப்பப்பட்ட சட்ட அறிவிப்பு கூறுகிறது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி பாய்ஸ் சீனியர் மேல்நிலைப் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடைபெற்ற ஆங்கில மொழித் தாளின் இரண்டாவது திருத்தத் தேர்வு குறித்த அறிக்கையை இந்த அறிவிப்பு மேற்கோளிட்டுள்ளது. அதில் குடியரசு தினத்தன்று வன்முறையைக் கண்டித்து ஆசிரியருக்குக் கடிதம் எழுதுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"