Advertisment

LIC ADO Recruitment 2019: பட்டதாரிகள் ‘மிஸ்’ பண்ணாதீங்க... எல்.ஐ.சி.யில் 8581 வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்

LIC ADO Recruitment 2019 Notification at licindia.in : எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான licindia.in என்கிற இணையதளத்தில் முழு தகவல்களும் இருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Schemes, LIC Policies

LIC Policies to be closed

Life Insurance Corporation- LIC Notification For ADO Recruitment 2019: எல்.ஐ.சி.யில் பட்டதாரிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 8581 பணியிடங்கள்! ஆன் லைனில் தேர்வு எழுதும் வசதி, ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம், விண்ணப்பிக்க வேண்டிய ‘லிங்க்’ இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்தியாவில் முக்கியமான பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி என அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) உள்ளது. இதில் ‘அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர்- ஏ.டி.ஓ) பணிக்கு 8581 பணியிடங்கள் உள்ளன.

LIC ADO Recruitment, LIC ADO Recruitment 2019 Notification, LIC 8581 Vacancies, வேலைவாய்ப்பு செய்திகள்

LIC ADO Recruitment 2019- 8581 Vacancies for degree Holders- எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள்

இதில் சென்னையை தலைமையகமாகக் கொண்ட தெற்கு மண்டலத்தில் மட்டும் 1257 பணியிடங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எல்.ஐ.சி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான licindia.in என்கிற இணையதளத்தில் முழு தகவல்களும் இருக்கின்றன.

மேற்படி licindia.in இணையதளத்தில் ஆன் லைன் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அறிவிப்பாணை வெளியான மே 20-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவை செய்யலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் ஜூன் 9, 2019. விண்ணப்பத்தில் குறிப்பிடும் தகவல்களை ஜூன் 9-ம் தேதி வரை தேவைப்பட்டால், திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 26-ம் தேதிக்குள் விண்ணப்ப நகலை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். மே 20 முதல் ஜூன் 9-க்குள் ஆன் லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஜூன் 29-ம் தேதிக்குள் ஆன் லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஜூலை 6 முதல் ஜூலை 13-க்குள் ஆன் லைனில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். பிரதான தேர்வு ஆன் லைனில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும். வயது வரம்பு 21 முதல் 30. விண்ணப்பக் கட்டணம் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ 50. மற்றவர்களுக்கு ரூ 600.

LIC ADO Recruitment 2019 Notification: விண்ணப்பிக்க இங்கு ‘க்ளிக்’ செய்யவும்

பட்டதாரிகள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment