LIC Assistant Recruitment Notification 2019: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகுந்த லாபத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் எல்.ஐ.சி. இதில் பணியாற்றும் வாய்ப்பை இளைஞர்கள் மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். அதில் சுமார் 8000 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC) நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்
மண்டல வாரியாக பணியிடங்கள்
வடக்கு மண்டலம் - 1544
மத்திய வடக்கு மண்டலம் - 1242
மத்திய கிழக்கு மண்டலம் - 1497
கிழக்கு மண்டலம் - 980
மத்திய மண்டலம் - 472
மத்திய தெற்கு மண்டலம் - 632
தெற்கு மண்டலம் - 400
மேற்கு மண்டலம் - 1104
சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
தேர்வு முறை : முதனிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் இன்டர்வியூ மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019
விண்ணப்ப கட்டணம் :
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி
மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : https://ibpsonline.ibps.in/licastaug19/