Advertisment

எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்ஸ் நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 200 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 200 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
lic hfl jobs

எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹோம் ஃபைனான்சில் இளநிலை உதவியாளர் (Junior Assistant) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 200 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Junior Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை : 200

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: 32,000 – 35,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.lichousing.com/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2024

விண்ணப்பக் கட்டணம்: 800

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.lichousing.com/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment