/indian-express-tamil/media/media_files/2025/08/20/lic-jobs-2025-08-20-15-53-11.jpg)
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (LIC) உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) மற்றும் உதவிப் பொறியாளர் (Assistant Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 841 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Administrative Officer
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 760
Generalist
காலியிடங்களின் எண்ணிக்கை: 350
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
Chartered Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். மேலும் Institute of Chartered Accountants of India முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
Company Secretary
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் Institute of Company Secretaries of India (ICSI) உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
Actuarial
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் Institute of Actuaries of India தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
Insurance Specialists
காலியிடங்களின் எண்ணிக்கை: 310
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
Legal
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in Law முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சில் உறுப்பினராக இருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
ASSISTANT ENGINEERS
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 81
Civil
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech/ B.E. (Civil) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
Electrical
காலியிடங்களின் எண்ணிக்கை: 31
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech/ B.E. (Electrical) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 1,26,000
வயது வரம்பு சலுகை: எஸ்.சி, எஸ்.டி (SC / ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு:
முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வு:
முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் திறனறிதல், கணிதம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம்.
அடுத்ததாக சம்பந்தப்பட்ட பாடப்பிரிவின் விரிந்துரைக்கும் வகை தேர்வு மற்றும் ஆங்கில மொழி விரிந்துரைக்கும் வகை தேர்வு நடைபெறும். இந்த தேர்வு 75 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 1.30 நிமிடங்கள்.
நேர்முகத் தேர்வு
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://licindia.in/recruitment-of-aao-generalists/-specialists/-assistant-engineers-2025 என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.09.2025
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.700. அதேநேரம் எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.85.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://licindia.in/recruitment-of-aao-generalists/-specialists/-assistant-engineers-2025 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.