தமிழகத்தில், இந்த வாரத்தில் மட்டும் நீங்கள் எந்தெந்த பணிகளுக்கு விண்ணபிக்கலாம் என்று முழு விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. விரைவாக விண்ணபித்து தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தமிழ்நாடு வனச்சார்நிலைப் 320 காலிபணியிடங்கள்:
தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வணக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிபணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணபங்களை வரவேற்கின்றது.
காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2019/12/forest-300x94.jpg)
காலிப்பணியிடங்களுக்கான பகிர்மானப் பட்டியல்:
/tamil-ie/media/media_files/uploads/2019/12/forest-1-300x127.jpg)
தேர்வு குறித்த முக்கிய நாட்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2019/12/forest-3-300x72.jpg)
தேர்வு நடத்தும் முறை:
/tamil-ie/media/media_files/uploads/2019/12/forest-4-300x97.jpg)
வயது வரம்பு:
/tamil-ie/media/media_files/uploads/2019/12/forest-5-300x205.jpg)
கல்வித் தகுதி:
வனக்காப்பாளர்: மேல்நிலை பள்ளிப்படிப்புகளில் (+2) தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியியல், வேதியியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருக்க வேண்டும்
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் : மேல்நிலை பள்ளிப்படிப்புகளில் (+2) தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியியல், வேதியியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருக்க வேண்டும்
தகுபெற்ற போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநற் உரிமத்தினை பெற்றிருக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறையில் 583 காலியிடங்கள் :
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் நிலை 2 பதிவிக்கான பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
கல்வித் தகுதி - 12ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்
மொத்த காலியிடங்கள் - 583
11 மாத கால கால்நடை பயிற்சி முடித்த பின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை 2 ஆக பணி நியமனம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊதியம்/ உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்
/tamil-ie/media/media_files/uploads/2019/12/animal-husbandry-300x63.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/AH2-300x186.jpg)
சதர்ன் ரயில்வே அப்ரெண்டிஸ்ஷிப் பணி:
ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி பணிகளுக்கான நோட்டிபிகேஷனை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி பெற வேண்டும்.
இதற்கு ஆர்வமுள்ள தேர்வர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
இதற்கான விண்ணப்ப செயல்முறை, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும். ஆன்லைன் செயல்முறையில் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
தெற்கு ரயில்வே பிரிவின் அதிகார வரம்பில் இருக்கும் தேர்வர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிட விவரங்கள் :
Single and telecommunication Workshop : 1654 பணிகள்
Perambur Carriage Works : 1208 பணிகள்
Central Workshop, Golden rocks : 667 பணிகள்
மேலும்,விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
கல்வித் தகுதி: தேர்வர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) அதற்கு சமமான குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்.சி.வி.டி /எஸ்.சி.வி.டி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஐ.டி.ஐ சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: தேர்வர்கள் 15 முதல் 22 வயது வரை இருக்க வேண்டும். Freshers /Ex-IT, MLT தேர்வர்களுக்கு வயது வரம்பு 24 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது. எஸ்/சி, எஸ்டி போன்ற பட்டியல்பிரிவு தேர்வர்கள் அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு பெறுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் : பொது/ ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .100 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி (PWPD )/ பெண்கள் போன்ற வகை தேர்வர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தமிழ்நாடு ஐசிடிஎஸ்-ல் 170 காலி பணியிடங்கள் :
உணவு, பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட போஷான் திட்டம் ஆகும்.
தமிழ்நாடு ஐசிடிஎஸ், ஒப்பந்த வகையில் பலதரப்பட்ட பணிகளுக்கான நோட்டிபிகேஷனை அறிவித்து இருக்கிறது.
பிளாக் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் ( 137), பிளாக் ஒருங்கிணைப்பாளர் (18), மாவட்ட ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் ( 10), அக்கவுண்டன்ட் (02 ) , ப்ராஜெக்ட் அசோசியேட் ( 01), ப்யூன் ( 02 ) போன்ற 170 இடங்களுக்கு தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ICDS-300x229.jpg)
மேலும் விவரங்க்களுக்கு- இங்கே கிளிக் செய்யுங்கள்