கட்டுரையாளர்: அங்கித் மெஹ்ரா, GyanDhan இன் CEO மற்றும் இணை நிறுவனர்
உங்கள் உயர் படிப்புகளுக்கு நிதியளிப்பதற்கான எளிதான வழி கல்விக் கடன். கல்விக் கடனைப் பெறுவதற்குப் பல ஆதாரங்கள் இருந்தாலும், பல கடன் வாங்குபவர்களுக்கு சொந்தமாக பிணை (சொத்து) இல்லை அல்லது கடனளிப்பவரின் அளவுகோல்களின்படி அந்த பிணை தகுதி இல்லாததாக இருப்பதால், பிணையத் தேவையின்றி கடன் பெறுவது கடினம். ஆனால், மாணவர்கள் இந்திய கடன் வழங்குபவர்களிடமிருந்து பிணையம் இல்லாமலும் கல்விக் கடனைப் பெறலாம்.
இதையும் படியுங்கள்: ஏமாற வேண்டாம்.. ஆன்லைன் பி.எச்.டி படிப்புகள் செல்லாது: மாணவர்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு
அடமானம் இல்லாமல் கல்விக் கடனைப் பெற விரும்பும் மாணவர்களுக்கான சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் இங்கே.
அடமானம் இல்லாமல் ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன் பெறுவது எப்படி?
கல்விக் கடன்களுக்கான கிரெடிட் கேரண்டி ஃபண்ட் திட்டத்தை (CGFSEL) இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இது மாணவர்கள் ரூ. 7.5 லட்சம் வரை எந்தவொரு பிணைய மற்றும் மூன்றாம் தரப்பு உத்தரவாதமும் இல்லாமல் கல்விக் கடனைப் பெற உதவுகிறது. இந்திய வங்கிகள் சங்கத்தின் மாதிரிக் கல்விக் கடன் திட்டத்தின் கீழ் வங்கிகள் வழங்கும் கல்விக் கடன்களுக்கான கிரெடிட் ரிஸ்க் உத்தரவாத நிதித் திட்டம் உத்தரவாதத்தை வழங்குகிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் குடும்ப வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விட அதிகமாக இருந்தாலும், இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள்.
மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இத்திட்டத்தின் அம்சங்கள்:
1. தகுதியான மாணவர்கள் ரூ. 7.5 லட்சம் வரையிலான கடன் தொகையில் மானியம் பெறுகிறார்கள்.
2. மானியமானது படிப்பு காலம் மற்றும் கூடுதல் காலம் ஆகியவற்றின் போது மட்டுமே செல்லுபடியாகும்.
3. மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்த மானியத்தைப் பெற முடியும்.
4. விண்ணப்பதாரர்கள் வருமானச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
5. கடன் வழங்கும் நிறுவனம், இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களுக்கான அடிப்படை விகிதத்திற்கு மேல் ஆண்டுக்கு அதிகபட்சமாக 2 சதவீத வட்டியை வசூலிக்கலாம்.
7.5 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் பெறுவது எப்படி?
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கல்வி கற்க பிணையின்றி கல்விக் கடன் வழங்கும் பல கடன் வழங்குநர்கள் சந்தையில் உள்ளனர். பொது வங்கிகள் பிணையில்லாமல் ரூ.7.5 லட்சம் வரை மட்டுமே கடன் வழங்குகின்றன. இருப்பினும், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFCs) ஏராளமான பிணையமில்லாத கடன்கள் உள்ளன, அவை ரூ. 75 லட்சம் வரையிலான கல்விச் செலவை உள்ளடக்குகின்றன.
பிணையம் இல்லாத கடன்களின் சில முக்கிய அம்சங்கள்:
1. பிணையம் இல்லாத கடன்கள், பிணையத்துடன் கூடிய கடன்களுக்கு மாறாக பரந்த அளவிலான படிப்புகள், கல்லூரிகள் மற்றும் நாடுகளை உள்ளடக்கியது.
2. வட்டி விகிதம் 10.5 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது, மேலும் 14 சதவீதம் வரை செல்லலாம்.
3. இணை விண்ணப்பதாரரை கடனுடன் இணை கையொப்பமிட ஏற்பாடு செய்தால், அடமானத்தில் பிணையம் இல்லாத எந்தவொரு கல்விக் கடனுக்கும் மாணவர் விண்ணப்பிக்கலாம்.
4. அடமானம் இல்லாமல் கிட்டத்தட்ட அனைத்து கடன்களும் கூடுதல் காலம் இல்லாமல் வரும். படிப்புக் காலத்தில் வசூலிக்கப்படும் வட்டியை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, இணை விண்ணப்பதாரர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்த வேண்டும்.
பிணையம் இல்லாமல் கடனுக்கான தகுதிகள்
படிப்புக் காலத்தில் வட்டி/பகுதி வட்டித் தொகையைச் செலுத்துவதற்கான பொறுப்பை ஏற்க போதுமான வருமானம் கொண்ட ஒரு இணை விண்ணப்பதாரரை ஏற்பாடு செய்யுங்கள்.
ஒரு நல்ல கல்விப் பதிவைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் கடன் வழங்குபவரின் முன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்க்கைப் பெற வேண்டும். இந்த பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை வாய்ப்புகளின் அடிப்படையில் கடன் வழங்குநரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இது தவிர, இணை விண்ணப்பதாரர் கடந்த இரண்டு ஆண்டுகளின் ஐ.டி.ஆர், வங்கி அறிக்கைகள் மற்றும் சம்பள சீட்டுகள் போன்ற வருமான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இணை விண்ணப்பதாரர் சுயதொழில் செய்பவராக இருந்தால், அவர்கள் பி/எல் அறிக்கைகள் மற்றும் ஜி.எஸ்.டி பதிவு போன்ற கூடுதல் வணிக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பிணையம் இல்லாமல் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையானது, கடனளிப்பவர் மற்றும் கடன் தயாரிப்பு குறித்து உரிய கவனம் செலுத்திய பிறகு கடனளிப்பவரை அணுகுவதாகும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும். இந்தக் கடன்கள் பிணையத் தேவையுடன் வரவில்லை என்பதால், ஆவணப் பட்டியல் சிறியதாக உள்ளது மற்றும் செயலாக்க நேரமும் குறைவாக உள்ளது.
பல சந்தைகள் மாணவர்களுக்கு சரியான தயாரிப்பைக் கண்டறிய உதவுகின்றன, ஆரம்பம் முதல் இறுதி வரை கடன் உதவி வழங்குகின்றன. ஒரு பிரத்யேக கடன் ஆலோசகர், சரியான கடன் தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பது முதல் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட கணக்கில் நிதியைப் பெறுவது வரை கடன் செயல்முறையை வழிநடத்த உதவுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.