LSAT-இந்தியா 2022 (சட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு) தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 53 மெரிட் ஸ்காலர்ஷிப்களையும் 3 கட்டுரை உதவித்தொகைகளையும் வழங்குவதாக LSAC குளோபல் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் 2022 ஜனவரி மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு LSAT-இந்தியாவில் அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு LSAC குளோபல் சிறந்த உதவித்தொகையை வழங்கும். இந்த ஆண்டு LSAC Global ஆனது LSAT-India 2022 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கான உதவித்தொகைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
LSAC குளோபல் லா அலையன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் சேர விரும்பும் LSAT –இந்தியா தேர்வில் முதல் 50 இடங்களுக்கான மதிப்பெண் பெற்றவர்கள், 50 ஸ்காலர்ஷிப்களைப் பெற தகுதியுடையவர்கள், இவர்களில் முதலிடம் பெற்றவருக்கு (ரூ. 2 லட்சம்), இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்றவர் (ரூ. 1 லட்சம்), மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்றவர் (ரூ. 1 லட்சம்), நான்காவது மற்றும் ஐந்தாவது அதிக மதிப்பெண் பெற்றவர் (தலா ரூ. 50,000), ஆறாவது முதல் இருபத்தி ஐந்தாவது அதிக மதிப்பெண் பெற்றவர்கள் (தலா ரூ. 25,000) மற்றும் இருபத்தைந்தாவது முதல் ஐம்பதாவது அதிக மதிப்பெண் பெற்றவர்கள் (தலா ரூ. 15,000) என உதவித்தொகை வழங்கப்படும்.
கூடுதலாக, முதுகலை பட்டப்படிப்பு திட்டத்தில் சேர விரும்பும் முதல் 3 LSAT-இந்தியா மதிப்பெண் பெற்றவர்கள் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். ஷாம்நாத் பஷீர் நீதி உதவித்தொகைக்கான அணுகல் ஒரு கட்டுரைப் போட்டியை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆண்டு தலைப்பு "சமூக ஊடகங்களின் தாக்கம் - இது உள்ளடக்கிய கொள்கையை ஊக்குவிப்பதா அல்லது இடைவெளியை விரிவுபடுத்துகிறதா?". மாணவர்கள் தலைப்புக்கு ஆதரவாகவோ எதிராகவோ ஒரு கட்டுரையை எழுதி, தங்கள் பதிவை 6 மே 2022க்குள் Discoverlawscholarship@lsac.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். LSAC குளோபல் லா அலையன்ஸ் கல்லூரியில் முழுநேர ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கும் LSAT-இந்தியா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த கட்டுரைப் போட்டி பொருந்தும்.
ஒவ்வொரு கட்டுரையும் அசல் தன்மை, தலைப்பிற்கான தொடர்பு, விரிவான தன்மை, கட்டமைப்பு, பகுப்பாய்வு, புரிதல், விளக்கம் மற்றும் சட்டத் தொழிலில் உள்ள பன்முகத்தன்மை தொடர்பான முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். சட்டப் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் இந்த கட்டுரைகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
எந்தவொரு LSAC குளோபல் லா அலையன்ஸ் கல்லூரியிலும் ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதல் வருடத்திற்கான கல்வி மற்றும் தங்கும் விடுதிக் கட்டணங்களை உதவித்தொகை உள்ளடக்கும். இந்த உதவித்தொகைகளின் கூடுதல் தகவல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, https://www.discoverlaw.in/scholarship-opportunities ஐப் பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.