அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்புகளுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பதால், காலியிடங்களை மாநில அரசு நிரப்பி கொள்ள அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் முன்பே வலியுறுத்தியதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியம் கூறுகையில் “ அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளதால், காலியிடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென முன்பே மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டோம். மேலும் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்க உள்ளோம்” என்று கூறினார்
மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் முடிவில், அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 காலியிடங்கள் இருந்தது. இதுபோல எய்ம்ஸ் மதுரையில் 3 காலிடங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் 30 காலிடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மேலாண்மை ஒதுக்கீட்டில் 17 காலிடங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த காலிடங்களை, மாநில அரசிடம் ஒப்படைக்க மா.சுப்பிரமணியம் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“