ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஏ தமிழுக்கு ஆண்டுக்கு மொத்தம் 20 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறைக்கான முதன்மை நிதி அளிக்கும் ஆணையமாக தமிழக அரசு உள்ளது.
ஆந்திரப் பிரதேசம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படிப்பில் மாணவர்கள் யாரும் சேராததால் எம்.ஏ. தமிழ் படிப்பு ரத்து செய்யப்படும் என்று அண்மையில் செய்தி வெளியானது. திராவிட பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படிப்பை தக்கவைக்க வேண்டும் என்றும் அதனால், எம்.ஏ. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்களை திராவிடப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு பலரும் அறிவுறுத்தினர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சேர்கிற மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில்தான், திராவிடப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் படிப்பில் இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்த ஆண்டு எம்.ஏ தமிழ் படிப்பில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரண்டையும் ஒட்டி ஆந்திராவில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகம், 2005ம் ஆண்டு முதல் தமிழுக்காக பிரத்யேகத் துறையை ஏற்படுத்தியது. இப்பல்கலைக்கழகம், பிஎச்.டி தவிர, வழக்கமான மற்றும் பகுதி நேரமாக வழங்கப்படும் எம்.ஏ. தமிழ் முதுகலைப் படிப்பை வழங்குகிறது.
எம்.ஏ. தமிழுக்கு ஆண்டுதோறும் மொத்தம் 20 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழ்த் துறைக்கான முதன்மை நிதி ஆணையமாக தமிழக அரசு உள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது, இதற்கு பல்கலைக் கழகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
“தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கர்நாடகாவில் கே.ஜி.எஃப் மற்றும் பெங்களூரு மாணவர்களையும் கவரும் நோக்கத்துடன் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை நிறுவப்பட்டது. ஆனால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்னும் இந்த பல்கலைக்கழகத்தைப் பற்றி அறியாமல் உள்ளனர். மேலும், பல்கலைகழகத்திற்கு எதிராக ஏராளமான வதந்திகள் பரவி வருவதால், மாணவர்களிடம் இது குறித்து தவறான கருத்து உள்ளது. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகள் இரண்டும் துறைக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றன” என்று திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் டி விஷ்ணு குமரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளர். 2019ம் ஆண்டு முன்னாள் துணைவேந்தரால் இந்தப் படிப்புக்கான சேர்க்கைகள் தடுக்கப்பட்டதாகவும், ஆனால் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ.பி.செல்லப்பாவின் முயற்சியால், இந்த சேர்க்கை தடைபடவில்லை என்றும் அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"