/indian-express-tamil/media/media_files/2025/04/02/V1VNjHeOwehnJ5xVZwtt.jpg)
'சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமே'... கட்டாயம் கோரிய மனுவை ஐகோர்ட் ஏற்க மறுப்பு
சி.பி.எஸ்.இ மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு விருப்பப் பாடமாக மட்டுமே வழங்க பள்ளிக்கல்வித் துறை அனுமதித்து பிறப்பித்த அரசாணையை (GO) எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை (PIL), உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (Tuesday) ஏற்க மறுத்துவிட்டது. மாநிலச் சட்டமே இந்தத் தளர்வுக்கு வழிவகுக்கலாம் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, மனுதாரரைப் பார்த்து, "நீங்கள் குறிப்பிட்ட வகைப்பாட்டை எதிர்க்கிறீர்கள். அது சட்டப்படி எப்படித் தவறானது என்பதை நீங்கள் விளக்க வேண்டும். சட்டத்தில் இதற்கு இடமிருந்தால், அந்த விருப்பம் (Optional) இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நீங்கள் எங்களுக்குக் காட்டும் வரை இந்த பொது நல வழக்கை நாங்கள் ஏற்க முடியாது," என்று தெரிவித்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மனுதாரரின் அணுகுமுறை பழமைவாதமாக (Conservative) இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளையோ (Migrants) அல்லது மத்திய அரசு/பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் குழந்தைகளையோ ஒரு மொழியை கட்டாயமாகப் படிக்குமாறு எப்படி நிர்பந்திக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். சட்டத்தில் அதற்கான வாய்ப்பு இருப்பதால்தான் இந்தத் தளர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அமர்வு குறிப்பிட்டது.
மனுதாரர் அவுடையப்பனுக்காக ஆஜரான வழக்கறிஞர் கவிதா தீனதயாளன், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் (TN Tamil Learning Act) உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான தரத்தில் தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும். இந்தச் சட்டத்தில் ஏதேனும் தளர்வு அல்லது மாற்றம் செய்வது, 1-ஆம் வகுப்பு முதல் விடாமுயற்சியுடன் தமிழ் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் மாணவர்களுக்கு எதிராக பாரபட்சத்தை ஏற்படுத்தும்.
டிச.31, 2024 தேதியிட்ட அரசாணை மூலம் சட்டம் 'நீர்த்துப்போகச்' செய்யப்பட்டுள்ளது. இது முழுமையான மற்றும் பயனுள்ள இணக்கத்தைத் தவிர்க்க நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாகச் சட்டத்தின் நோக்கம் (அனைத்து மாணவர்களுக்கும் தமிழை கட்டாயமாக்குவது) தோல்வியடைகிறது.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, ஐ.ஜி.சி.எஸ்.இ மற்றும் ஐ.பி. வாரியங்களில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழில் கற்பதில் தளர்வு அளிப்பது, அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் படித்து, தமிழை கட்டாய 2-ம் மொழியாகப் படிக்கும் மாணவர்களிடையே நியாயமற்ற ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 14-இன் கீழ் உள்ள சமத்துவக் கொள்கைகளை மீறுவதாகவும் உள்ளது என்று அவர் வாதிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.