சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு நீதித்துறை அகாடமியில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Post Graduate in Law படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 45,000
Research Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : Graduate in Law படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கல்வி மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnsia.tn.nic.in or www.mhc.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Registrar (Recruitment), High Court, Madras — 600 104
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.238%20of%202023-Research%20Fellow%20&%20Research%20Assistant-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“