சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
VC Host (Technical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 75
கல்வித் தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science, Software Engineering, AI and Machine Learning) /B.Tech (IT) / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science, Software Engineering, AI and Machine Learning) / M.Tech (IT) / M.S (IT) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 22.11.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கணினி சார்ந்து 50 வினாக்களும், பொது அறிவில் 10 வினாக்களும் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ 600
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/vc_rec/docs/Notification%20-%20VC%20Host.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“