சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி நிரலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ASSISTANT PROGRAMMER
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
கல்வித் தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science, Software Engineering, AI and Machine Learning) /B.Tech (IT) / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science, Software Engineering, AI and Machine Learning) / M.Tech (IT) / M.S (IT) படித்திருக்க வேண்டும். மேலும் 1-3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / SC(A) / ST / MBC & DC / BC / BCM பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 35,900 – 1,31,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தமிழ் மொழிப்பாடத்தில் 50 வினாக்களும், கணினி சார்ந்து 70 வினாக்களும் கேட்கப்படும். திறனறித் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000, SC / SC(A) / ST பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.