இந்திய பார் கவுன்சில் (BCI) நடத்தும் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுக்கான (AIBE) விண்ணப்பக் கட்டணத்தை குறைக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பை, தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க:
“பதிவுக் கட்டணத்தைப் போலல்லாமல், தேர்வுக் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வ ஏற்பாடு எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் ஒரு சட்டப்பூர்வ உரிமை இருப்பதைக் காட்ட முடிந்தால் மட்டுமே கட்டளை நீதிப்பேராணையை வழங்க முடியும். இந்த வழக்கில், அத்தகைய சட்டப்பூர்வ உரிமை காட்டப்படவில்லை,” என்று நீதிமன்றம் கூறியதாக லைவ் லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டணம் 'அதிகமானதாக' இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் பெஞ்ச் மேலும் கூறியது, விண்ணப்பக் கட்டணம் ரூ 3,500 ஆக இருக்கும் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுக்கு இது பொருந்தாது. “எந்தவொரு சட்ட மீறலும் இல்லாவிட்டாலும், கட்டணத்தின் அளவு மிகையாக இருப்பதைக் கண்டால், நாங்கள் அதில் தலையிடுவது நியாயமானது. ஆனால் அப்படி இல்லை.
விண்ணப்பதாரர்களிடம் கோருவது ரூ.3,500 மட்டுமே. இது அதிகம் என்று சொல்ல முடியாது. தலையிட எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை,” என்று பெஞ்ச் கூறியதாக லைவ் லா தெரிவித்துள்ளது.
அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை குறைக்க கோகுல் அபிமன்யு என்ற வழக்கறிஞர் மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
பொதுப் பிரிவினருக்கான அகில இந்திய பார் கவுன்சில் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை 2017 இல் ரூ.3,500 ஆக இந்திய பார் கவுன்சில் உயர்த்தியபோது தற்போதைய விண்ணப்பக் கட்டணம் முடிவு செய்யப்பட்டது. பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.2500 கட்டணம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“