கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் இடமிருந்து நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கல்வி நிறுவனங்களின் நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை, வரி விதித்த உ த்தரவை நீதிமன்றம் சத்து செய்தது. அதனை எதிர்த்து வருமான வரித்துறையால் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

நன்கொடைகள் வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் விவரங்களை மக்கள் தெரிவிப்பது போல இணையதளம் அமைக்குமாறு அரசாங்கத்திடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சேர்ப்பதற்கு நன்கொடை வசூலிப்பது தவறு என்றும், அதற்கு வருமான வரித்துறை வரி விதித்தது சரியே என்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil