/tamil-ie/media/media_files/uploads/2021/02/image-1.jpg)
Supernumeracy Seats for at Madras University For Transgender: சென்னை பல்கலைக்கழகம் 2021-22 கல்வியாண்டு முதல் அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு இடத்தை ஒதுக்க முடிவு செய்துள்ளது.
மேலும், அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சார்ந்த தமிழ் மாணவர்களுக்கு தனியாக ஒரு இடத்தை ஒதுக்குவதற்கான தீர்மானத்தையும் சென்னை பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில் நிறைவேற்றியது.
இந்த இரண்டு இடஒதுக்கீடு முறைகளுக்காக ஒவ்வொரு துறையிலும் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் முடிவுக்கு சிண்டிகேட் ஏற்கனவே ஒப்புதல் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில், மேலாண்மை, சந்தைப்படுத்தல், நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை, அமைப்புகள் மேலாண்மை, தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றில் புதிய டிப்ளோமா படிப்புகளை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வேலைவாய்ப்புகளை பெருமளவு உருவாக்கும் விதமாக , 2021-22 கல்வியாண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஆன்லைன் சான்றிதழ் / டிப்ளமோ / உயர்நிலை சான்றிதழ் படிப்புகளை வழங்க சென்னை பல்கலைக்கலகம் திட்டமிட்டுள்ளது.
கோவிட் -19 க்கு பிந்தைய சூழ்நிலைக்கான திட்டமிடலில், ஆன்லைன் வழிக் கல்வி முறையை சென்னை பலகலைக்கலகம் முன்னிலைப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, பெரும் தரவு மதிப்பீடு, இயந்திரம் கற்றல், வணிக பகுப்பாய்வு, சைபர் தடயவியல், உளவியல் போன்ற படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.