நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 29-ம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது . "பாலியல் தொந்தரவு இல்லாத வளாகம்" என்பதே அந்த சுற்றறிக்கையின் அடிப்படை சாராம்சம்.
சில நாட்களுக்கு முன்பு, மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் இரு பேராசிரியர்கள் கல்லூரி சுற்றிலாவின் பொது மாணவிகளை பாலியல் தொந்தரவுக் கொடுத்ததன் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது போன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழகம்: இனி பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் எந்த காரணங்களுக்காவும் தங்களது வீடுகளுக்கு மாணவ, மாணவியர்களை அழைக்கக்கூடாது. மாணவர்களை வீட்டிற்கு அழைத்தாள், அது பாலியல் தொந்தரவு என்று இயல்பாகக் கருதப்படும். ஒருவேளை, மாணவர்கள் பேராசிரியர் வீடுகளில் தாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் கட்டாயம் வாங்கி இருக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் தங்கள் வழிகாட்டியோடு(guide) கல்வி சுற்றுலா சென்றாலும் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்றே செல்லவேண்டும்.