/indian-express-tamil/media/media_files/2025/10/11/madras-university-2025-10-11-09-51-25.jpg)
சென்னை பல்கலை.யில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் இணைப்பு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
சென்னை பல்கலைக்கழகம் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ. படிப்புகளை கொண்ட மேலாண்மை நிறுவனங்களை இணைப்பதற்கான (Affiliation) செயல்முறையைத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக வட்டாரங்களின்படி, புதிய கல்லூரிகளுக்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 20 ஆம் தேதி முதல் அபராதம் இன்றித் தொடங்கும். தாமதமான பதிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வரை அபராதத்துடன் அனுமதிக்கப்படும்.
சரியான நேரத்தில் பதிவு செய்யத் தவறும் மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) மற்றும் பிற அரசு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட அனுமதியை உரிய தேதிக்குப் பிறகு சமர்ப்பிக்கும் கல்லூரிகளின் மேலாண்மை, இணைப்புக்குக் கருதப்பட மாட்டாது, மேலும் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளை போலன்றி, வரவிருக்கும் கல்வியாண்டிற்கான இணைப்பு செயல்முறை கடுமையாக இருக்கும். கல்வி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன், பாட வாரியக் குழு (Board of Studies) ஒரு சரிபார்ப்புப் பட்டியலை (Checklist) உருவாக்கும். இது புதிய கல்லூரிகள் மற்றும் படிப்புகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிபார்ப்புப் பட்டியலில் அடங்கும் விவரங்கள்:
கல்லூரியின் உள்கட்டமைப்பு (Infrastructure), கிடைக்கக்கூடிய படிப்புகளுக்கு ஏற்ப ஆசிரியர்களின் பலம் (Faculty strength), ஆய்வகங்கள் (Laboratories) மற்றும் விடுதி வசதிகள் (Hostel facilities), இறுதி இணைப்பை பல்கலைக்கழகம் உறுதி செய்வதற்கு முன், நிர்வாகம் வழங்கிய தரவுகளைச் சரிபார்க்க ஆய்வு குழு ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்து இறுதிக் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
தற்போது, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 72 கற்பித்தல் துறைகள் (Teaching departments), 46 ஆராய்ச்சிக் கூடங்கள் (Research centres), 136 இணைப்புக் கல்லூரிகள் (Affiliated colleges), 89 படிப்புகள் மற்றும் 17 கற்பித்தல் மையங்கள் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us