Madras University Final Year Semester exam Date: இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி ஆண்டு/பருவத் தேர்வு செமஸ்டர் தேர்வுக்கான தேதியை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. செப். 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், அக்டோபர் மாதம் 14ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிமாநில மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.
செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக உயர்க்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார். இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மேற்படி இறுதி ஆண்டு தேர்வுகள் மாணாக்கர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்தும் என்று யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகளை தெரிவித்தன.
இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்வதற்கான மகாராஷ்டிரா, டெல்லி போன்ற சில மாநிலங்களின் முடிவுகளை யு.ஜி.சி விமர்சித்தது. இதுபோன்ற முடிவுகள் உயர்கல்வியின் தரங்களை நேரடியாக பாதிக்கும் என்றும், உயர்கல்வியின் தரங்களை பிரத்தியேகமாக ஒருங்கிணைத்து நிர்ணயிக்கும் சட்டத்துறையில் ஒரு அத்துமீறலாக இருக்கும் என்றும் யு.ஜி.சி கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil