/tamil-ie/media/media_files/uploads/2022/06/madras-univ.jpg)
Madras University IDE Results 2022 will be out today
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்குக் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் தொலைதூர படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளன. மாணவர்கள் தங்களின் சேர்க்கை எண்ணைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மூலம் 2021-ம் ஆண்டு டிசம்பர் பருவத்தில் நடைபெற்ற இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 17) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.